ADDED : மே 31, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள இ–சேவை மற்றும் ஆதார் மையத்திற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரி சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள, ஆதார் மையத்திற்கு, ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் திரண்டு வருகின்றனர்.
அதே போல், இ–சேவை மையத்திற்கும், வருமானச்சான்று, ஜாதிச்சான்று என உயர்கல்விக்கு சேருவதற்கான சான்றுகள் பெற மாணவர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
எனவே, ஆதார் மற்றும் இ–சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், உடனடியாக பணிகளை மேற்கொள்ளவும், விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
