/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திருப்பூர் வளர்ச்சிக்கு அ.தி.மு.க., துணை நிற்கும்'
/
'திருப்பூர் வளர்ச்சிக்கு அ.தி.மு.க., துணை நிற்கும்'
'திருப்பூர் வளர்ச்சிக்கு அ.தி.மு.க., துணை நிற்கும்'
'திருப்பூர் வளர்ச்சிக்கு அ.தி.மு.க., துணை நிற்கும்'
ADDED : ஏப் 07, 2024 12:33 AM

அனுப்பர்பாளையம்;திருப்பூர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், அருணாசலம், போட்டியிடுகிறார். நேற்று மாநகர பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
ரயில் நிலையம் அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, 19, 20, 30, 31 ஆகிய வார்டு பகுதிகளில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். வேட்பாளர் வாகனத்துக்கு முன், மேளதாளம் முழங்க தொண்டர்கள் பைக்கில் கட்சி கொடியை கட்டி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
வேட்பாளர் அருணாசலம் பேசுகையில், ''திருப்பூர் வளர்ச்சிக்கு அ.தி.மு.க., என்றும் துணை நிற்கும். திருப்பூருக்கு அதிக திட்டங்களை கொண்டுவர அ.தி.மு.க.,வை ஆதரியுங்கள்'' என்றார். எம்.எல்.ஏ., ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பங்கேற்றனர்.