ADDED : பிப் 22, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் தலைமைவகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், ஆர்.டி.ஓ.,க்கள் மோகனசுந்தரம் குமார் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். சீர் மிகு நகர திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்றுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், அம்ரூத் திட்டத்தில் புதிய குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை, ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் உள்பட அனைத்து துறை சார்ந்து நடைபெற்றுவரும் பணிகள் குறித்து, கண்காணிப்பு அலுவலர் ஆய்வு நடத்தினர்; பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.