/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் ஸ்டேஷன் எல்லை சீரமைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் பாதிப்பு
/
போலீஸ் ஸ்டேஷன் எல்லை சீரமைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் பாதிப்பு
போலீஸ் ஸ்டேஷன் எல்லை சீரமைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் பாதிப்பு
போலீஸ் ஸ்டேஷன் எல்லை சீரமைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் பாதிப்பு
ADDED : மே 19, 2024 11:12 PM
உடுமலை:குடிமங்கலம் போலீஸ் எல்லையை சீரமைத்து, கூடுதலாக ஒரு ஸ்டேஷன் உருவாக்குவதற்கான கருத்துரு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, உடுமலை சப்-டிவிசனுக்குட்பட்ட குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை மறுசீரமைக்கப்பட்டது.
அப்போது, கோவை மாவட்டம், கோமங்கலம், நெகமம் போலீஸ் கட்டுப்பாட்டிலிருந்த, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் பிரிக்கப்பட்டு, சேர்க்கப்பட்டன.
இதனால், குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில், 83 கிராமங்கள் உள்ளன. பொள்ளாச்சி, பல்லடம், மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா எல்லைகளை ஒட்டி, பரந்து விரிந்த பரப்பில், குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டு கிராமங்கள் அமைந்துள்ளன.
உதாரணமாக, நெகமம் அருகிலுள்ள வீதம்பட்டி கிராமத்திலிருந்து குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன், 25 கி.மீ., துாரம் தள்ளி அமைந்துள்ளது.
இவ்வாறு, எல்லை பல மடங்கு விரிவுபடுத்தப்பட்ட பிறகு, குற்றத்தடுப்பு பணிகளிலும், இதர பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு, இடம் தேர்வுக்கான பணிகள் நடந்தது. ஆனால், அத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டு பகுதியில், 'சில்லிங்' மது விற்பனை, கிராமங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
குறிப்பாக, கோவை மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களில், விளைநிலங்களிலுள்ள, கேபிள் வயர், மோட்டார் திருட்டு என விவசாயிகளும் பாதித்து வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளை சீரமைத்து புதிதாக ஒரு ஸ்டேஷன் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
இது குறித்து கருத்துரு அனுப்பி, குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாக பிரிக்கப்படும் என, போலீஸ் உயர் அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

