/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூத்த குடிமகன்களிடம் நேசம்; மாநகர போலீஸ் மனிதநேயம்
/
மூத்த குடிமகன்களிடம் நேசம்; மாநகர போலீஸ் மனிதநேயம்
மூத்த குடிமகன்களிடம் நேசம்; மாநகர போலீஸ் மனிதநேயம்
மூத்த குடிமகன்களிடம் நேசம்; மாநகர போலீஸ் மனிதநேயம்
ADDED : ஆக 22, 2024 12:31 AM
திருப்பூர் : ஆக., 21ம் தேதி உலக மூத்த குடிமகன்கள்தினம். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள அனைத்து ஸ்டேஷன்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முதியோர்இல்லம், குடியிருப்புகளில் தனியாக வசித்து வரும் வயதான தம்பதி, முதியவர் என ஒவ்வொருவரையும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் ரோந்து போலீசார் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
முதியோர் இல்லம் வாயிலாக, காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு உதவிகளும் செய்யப்பட்டன. நல்லுார் ஸ்டேஷனில் பல ஆண்டுகளாக துாய்மை பணியை மேற்கொண்டு வந்த மூதாட்டி பாப்பம்மா என்பவர் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.
போலீஸ் கமிஷனர் லட்சுமி, அவிநாசியில் உள்ள முதியவர் இல்லத்தில் சீனியர் சிட்டிசன்களை கவுரவித்து, அவர்களுக்கு பழங்களை வழங்கினார்.