/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசல்
/
ரோட்டில் ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசல்
ADDED : செப் 04, 2024 01:31 AM
உடுமலை;உடுமலையிலிருந்து திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட சுற்றுலாப்பகுதிகளுக்கும் தொலைதுார கிராமங்களுக்கு செல்வதற்கும், மூணார் செல்வதற்குமான பிரதான வழித்தடமாக போடிபட்டி உள்ளது.
நாள்தோறும் ஆயிரகணக்கான வாகனங்கள், போடிபட்டி வழியாக செல்கின்றன. ஆனால் இங்கு ரோட்டோர ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
சாலையோரத்தில், தற்காலிக கடைகள் அதிகம் அமைக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் 'பார்க்கிங்' செய்வதற்கான இடமும் இருப்பதில்லை.
பொதுமக்கள் ரோட்டோரத்தில் நடப்பதற்கும் வழியில்லாமல், வாகன ஓட்டுநர்களும் விதிமுறை மீறி வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். ரோட்டின் பாதி வரை வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
குறிப்பாக, மாலை நேரங்களில் போடிபட்டி எல்லை முதல், முருகன் கோவில் கடப்பதற்குள், போக்குவரத்து பாதிக்கப்பட்டு நெரிசல் ஏற்படுகிறது.
ரோட்டை ஆக்கிரமிக்கும் வகையில் கடைகள் அமைப்பதையும், வாகனங்கள் நிறுத்தப்படுவதையும் கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.