/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய செய்தி கால்நடைகளுக்கு பாதிப்பு தடுக்க யோசனை
/
விவசாய செய்தி கால்நடைகளுக்கு பாதிப்பு தடுக்க யோசனை
விவசாய செய்தி கால்நடைகளுக்கு பாதிப்பு தடுக்க யோசனை
விவசாய செய்தி கால்நடைகளுக்கு பாதிப்பு தடுக்க யோசனை
ADDED : ஆக 09, 2024 02:42 AM
உடுமலை;'காலநிலை மாற்றம், கால்நடைகளை பாதிக்க கூடும்' என, வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, இந்திய வானிலைத் துறையின் கோவை, வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூருக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. நேற்றுமுன்தினம் துவங்கி வரும், 11ம் தேதி வரை, திருப்பூரில், பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம், 34 முதல், 35 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 21 முதல், 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
காலை நேர காற்றின் ஈரப்பதம், 70 சதவீதம்; மாலை நேர காற்றின் ஈரப்பதம், 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக, மணிக்கு, 16 முதல், 22 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்; பெரும்பாலும் தென் மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும்.
தற்போது நிலவும் வானிலை, கோமாரி நோய்க்கு சாதகமானதாக இருப்பதால், கறவை மாடு மற்றும் உழவு மாடுகளின் வாய் மற்றும் கால் குளம்புகளை பரிசோதனை செய்ய வேண்டும்.