/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை உழவு குறித்து வேளாண் துறை 'அட்வைஸ்'
/
கோடை உழவு குறித்து வேளாண் துறை 'அட்வைஸ்'
ADDED : மே 28, 2024 12:37 AM
வெள்ளகோவில்;கோடை மழையைப் பயன்படுத்தி, கோடை உழவு மேற்கொண்டு, பயிறு வகைகளை சாகுபடி செய்யலாமென வேளாண்துறை அறிவித்துள்ளது.
வெள்ளகோவில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பொன்னுசாமி கூறியதாவது: வெள்ளகோவில் பகுதியில், 114 மி.மீ., அளவு கோடை மழை பெய்துள்ளது. இது கோடை உழவுக்கு ஏற்ற பருவம். கோடை உழவு செய்வதனால் மண்ணின் கடினத்தன்மை நீங்கி மண் அரிப்பு தடுக்கப்படுவதுடன் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.
இதனால் களைகள் கட்டுப்படுத்துவதுடன் பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மண்ணில் உள்ளதால் அவற்றை கோடை உழவு செய்வதால் வெளியே கொண்டு வரப்படுகிறது.
முத்துார் சுற்றுப்பகுதியில் கீழ்பவானி பாசனப்பகுதியில் கிணறு மூலம் பாசன வசதி உள்ள பகுதிகளில் தண்ணீர் தேவை குறைவான, குறைந்த வயதுடைய பயிறு வகைகளான உளுந்து, பாசிப்பயிறு மற்றும் தட்டைப்பயிறு சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த காலத்தில் உபரி வருமானம் கிடைக்கும்.
வேளாண் மையங்களில் பயிர்களுக்கு தேவையான சிறு தானிய நுண்ணுாட்டம், பயிறு வகை நுண்ணுாட்டம் போன்றவை மானிய விலையிலும், தென்னை நுண்ணுாட்டம் முழு விலையிலும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் கோடை உழவு மற்றும் பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.