ADDED : ஜூன் 12, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட போதிலும் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
சமீபத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதனால், தற்போது இயங்கி வரும் அலுவலகத்தில் போதிய பராமரிப்பு பணி செய்வதில்லை. அலுவலக சுவரில் ஆலமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து வருகிறது. கட்டடத்தை நன்கு பராமரித்தால், அதனை வேறு பயன்பாட்டுக்கு விட முடியும்.