/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மது விற்பனை 'அமோகம்' பொதுமக்கள் போராட்டம்
/
மது விற்பனை 'அமோகம்' பொதுமக்கள் போராட்டம்
ADDED : மே 09, 2024 04:38 AM

அவிநாசி : அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சி கிராமங்களில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கருக்கங்காட்டுபுதுாரில் உள்ள அப்துல்கலாம் குடியிருப்போர் நலச்சங்கம் பகுதியைச் சுற்றிலும் உள்ள வீடுகளிலும், மளிகை கடையிலும் மது பாட்டில்களை பதுக்கி சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மாலை வேளையில் மது அருந்திவிட்டு போதை ஆசாமிகள் வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவதால், அருகிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் உயிருக்கு அச்சுறுத்தலும், அதே சமயத்தில் குடிமகன்களுக்கு இடையே நடைபெறும் சண்டையால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் சூழ்நிலையும் உள்ளது. இதனால், ஆவேச மடைந்த பொதுமக்கள், சட்டவிரோத மது விற்பனையை தடை செய்து, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடுவச்சேரி ஊராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், டி.எஸ்.பி., சிவகுமார், இன்ஸ்பெக்டர் ராஜவேல் ஆகியோரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட டி.எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.