/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வண்டல் மண்ணில் வளரும் இலுப்பை மரம்
/
வண்டல் மண்ணில் வளரும் இலுப்பை மரம்
ADDED : ஏப் 27, 2024 12:13 AM
உடுமலை:இந்தியாவை தாயகமாகக் கொண்ட இலுப்பை மரம், தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக வளர்கிறது. ஆண்டு மழைப்பொழிவு 800 -மி.மீ., முதல் 1,800 மி.மீ., வரை உள்ள பகுதிகளில் இம்மரங்கள் செழிப்பாக வளர்கின்றன. மணல் கலந்த மண்ணிலும், வண்டல் மண்ணிலும் சிறப்பாக வளர்கிறது.
நாற்றங்காலில் உள்ள ஓராண்டு நிரம்பிய நாற்றுகள் வயல்களில், மழைக்காலங்களில் நடவு செய்யலாம். மே மற்றும் ஜூன் மாதங்களில் நடப்படுகிறது. நடவின்பொழுது ஆணிவேரை அசைக்காமல் கவனத்துடன் நடவு செய்ய வேண்டும்.
மூன்று மாத இடைவெளிகளில் களைநீக்கம் செய்து செடியைச் சுற்றிலும் லேசாகக் கிளறி விட வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை களை நீக்கம் செய்வது அவசியம்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பழுத்த பழங்கள் உள்ள கிளைகளை உலுக்குவாதல், சேகரிக்கப்படுகின்றன.
இப்பழங்கள் தரைகளில் உரசப்பட்டு நீரில் உளற வைக்கப்பட்டு விதையுறைகளிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
நடவு செய்த, 15 நாட்களுக்குப் பிறகே விதை முளைக்கும். இந்நாற்றுகள் ஓராண்டு வரை நேரடியான வெயில் படாமல் பாதுகாக்கப்படுகின்றன. மிக கடினமான மரக்கட்டைகள் கட்டுமானம் மற்றும் மரச்சாமான்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும், விபரங்களுக்கு, மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை விவசாயிகள் அணுகலாம், என, கோவை வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.

