/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனைத்து மாணவ, மாணவியரும் உயர் கல்வியை தொடர வேண்டும்!
/
அனைத்து மாணவ, மாணவியரும் உயர் கல்வியை தொடர வேண்டும்!
அனைத்து மாணவ, மாணவியரும் உயர் கல்வியை தொடர வேண்டும்!
அனைத்து மாணவ, மாணவியரும் உயர் கல்வியை தொடர வேண்டும்!
ADDED : மே 06, 2024 11:10 PM
திருப்பூர்:பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை தொடர வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில், பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு நேற்று காலை வெளியிடப்பட்டது. 97.45 சதவீத தேர்ச்சியுடன், திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்பட கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வில், 97.45 சதவீத தேர்ச்சியுடன், திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியர், 10 ஆயிரத்து, 483 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில், 10 ஆயிரத்து 37 மாணவர்கள், அதாவது 95.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 23 ஆயிரத்து 242 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடின உழைப்பே, வெற்றியை தேடித்தந்துள்ளது. மாணவர்கள், படிப்பை கைவிட்டுவிடக்கூடாது. தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் கட்டாயம் உயர் கல்வியில் சேரவேண்டும். கல்லுாரிக்கு சென்று, நன்றாக படிக்க வேண்டும். மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை தடுக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.