/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அம்மன் அருளாலே அகிலமெல்லாம் ஆற்றல்! ஆடி வெள்ளிக்கிழமை கொண்டாட்டம் இதயபூர்வமாய் வணங்கிய பக்தர்கள்

UPDATED : ஆக 10, 2024 03:32 AM
ADDED : ஆக 10, 2024 12:00 AM

திருப்பூர்;ஆடிவெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.
ஆடி வெள்ளிக்கிழமை, அம்மன் கோவில்களில், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள், அன்னதானம் நடந்து வருகிறது.
நான்காவது ஆடி வெள்ளியான நேற்று, திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாரியம்மன் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில் என, அனைத்து அம்மன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
மஞ்சள் நீர், சந்தனம், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகமும், அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் ராகிக்கூழ் எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அம்மனுக்கு, கண்ணாடி வளையல் அலங்காரம், ரூபாய் நோட்டு அலங்காரம், காய்கறி அலங்காரம் என, பல்வகை அலங்கார பூஜைகள் செய்து, பக்தர்கள் வழிபட்டனர்.
புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில், கிளி வாகனத்தில் அமர்ந்த மீனாட்சி அம்மன் அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலித்தார். பெண்கள் விரதமிருந்து அம்மனை வழிபடுவது வழக்கம்; இதையொட்டி கோவில்களில், நேற்று மதியம் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருப்பூர், ஆக. 10-
ஆடிவெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.