/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
ADDED : மே 05, 2024 11:10 PM

உடுமலை;மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 1969-74 வரை படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், மதுரை மற்றும் டில்லி, ைஹதராபாத் பகுதிகளிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போது கற்பித்த ஆசிரியர்களும், தற்போது வயது முதிர்ந்த நிலையிலும், இந்த சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளி அனுபவங்களை பேசியும், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தியும் கொண்டாடினர். ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாணவர்களை ஒருங்கிணைத்து செய்திருந்தார்.
அனைவருக்கும் வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் 'கரைவழி நாடும் நாகரீகமும்' என்ற நுால் வழங்கப்பட்டது.