/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
/
பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED : செப் 03, 2024 01:24 AM

பல்லடம்;வெங்கிட்டாபுரம் ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பீடத்தில், ஆவணி மாத அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தன.
முன்னதாக, நேற்று முன்தினம், அமாவாசையை முன்னிட்டு மகா சண்டி ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து, நேற்று காலை, எதிரிகள் தொல்லை நீங்கி, கடன்களை தீர்த்து, திருமண, குழந்தை பாக்கியம், தொழில் வியாபார அபிவிருத்தி தரும் பிரத்தியங்கிரா தேவியின் நிகும்பலா யாகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சித்தம்பலம் நவகிரக கோட்டையில் நடந்த அமாவாசை வழிபாட்டில், மஹா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர், வழிபாட்டை துவக்கி வைத்தார். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் அருள் பாலித்தார்.