ADDED : மார் 10, 2025 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் ஏ.வி.பி., ரோட்டில் அம்மா உணவகம் உள்ளது.
மேற்கூரை முழுவதும் துரு பிடித்து, பழுதடைந்து ஆங்காங்கே பொத்தல் விழுந்து உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி உள்ளே வருகிறது. மின் விசிறிகள் பழுதாகியுள்ளன. மழை நேரங்களில் உணவு தயார் செய்ய முடியாததோடு, பொதுமக்கள் உண்பதற்கும் சிரமம் ஏற்படுகிறது. அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பாதிக்காமல் இருக்க பொருட்களை பலகை மீது வைத்து தார் பாய் போட்டு மூடி வைக்கின்றனர். மேற்கூரையை மாற்ற வேண்டும்.