/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளையல் அலங்காரத்தில் அம்மன் அருட்கடாட்சம்; களைகட்டியது ஆடிப்பூரம் திருவிழா
/
வளையல் அலங்காரத்தில் அம்மன் அருட்கடாட்சம்; களைகட்டியது ஆடிப்பூரம் திருவிழா
வளையல் அலங்காரத்தில் அம்மன் அருட்கடாட்சம்; களைகட்டியது ஆடிப்பூரம் திருவிழா
வளையல் அலங்காரத்தில் அம்மன் அருட்கடாட்சம்; களைகட்டியது ஆடிப்பூரம் திருவிழா
ADDED : ஆக 08, 2024 12:25 AM

திருப்பூர் : ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பெருமாள் கோவில் ஆண்டாள் சன்னதிகளிலும், அம்மன் கோவில்களிலும் நேற்று கண்ணாடி வளையல் அலங்கார பூஜை நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஸ்ரீபூமி தேவி தாயாருக்கும், ஸ்ரீஆண்டாள் உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது; சிறப்பு நவரத்தின அங்கி அலங்காரத்துடன் ஆண்டாள் நாச்சியார் அருள்பாலித்தார்.
திருப்பூர் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடந்தது. அப்போது, ஆண்டாள் திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டன.
கோவில்வழி வரதராஜப்பெருமாள் கோவில், மங்கலம் ஆதிகேசவ பெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில், சாமளாபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோவில் உட்பட, அனைத்து பெருமாள் கோவில்களிலும், ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தன.
அம்மன் கோவில்களில், அம்பாள் அவதரித்த ஆடிப்பூரத்தையொட்டி, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. குறிப்பாக, கண்ணாடி வளையல்களைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
வாவிபாளையம் மாகாளியம்மன் கோவில், ஊத்துக்குளி ரோடு கவுமாரியம்மன் கோவில், ஜீவா காலனி கருப்பராயன் கோவில்களில் சிறப்பு ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது.
ஆடிப்பூர விழாவில், மங்களத்தின் அடையாளமாக, அம்மனுக்கு கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்கள் பலரும், வளையல்களை வழிபாட்டுக்காக கொடுத்தனர்.
அனைத்து கோவில்களிலும், பெண் பக்தர்களுக்கு, கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, மலர் வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.