/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்விபத்து தவிர்க்க விழிப்புணர்வு பலகை மின்வாரியம் சார்பில் ஏற்பாடு
/
மின்விபத்து தவிர்க்க விழிப்புணர்வு பலகை மின்வாரியம் சார்பில் ஏற்பாடு
மின்விபத்து தவிர்க்க விழிப்புணர்வு பலகை மின்வாரியம் சார்பில் ஏற்பாடு
மின்விபத்து தவிர்க்க விழிப்புணர்வு பலகை மின்வாரியம் சார்பில் ஏற்பாடு
ADDED : ஜூன் 21, 2024 11:57 PM

உடுமலை:பருவமழை காலத்தில், மின்விபத்துகளை தவிர்க்க, மின்வாரியம் சார்பில், கிராமங்களில், விழிப்புணர்வு பிளக்ஸ் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை கோட்ட மின்வாரியம் சார்பில், பருவமழை காலத்தில், மின்விபத்துகளை தவிர்க்க மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிளக்ஸ் வைக்கப்பட்டு வருகிறது.
போடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில், வீட்டு மின் இணைப்பு சார்ந்த பணிகளுக்கு, தரமான குறியீடு பெற்ற மின்சாதனங்களை பயன்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீஷியனை கொண்டு செய்ய வேண்டும். கம்பிகளில் ஈரத்துணிகளை உலர்த்தக்கூடாது; மின்கம்பங்கள், இழுவை கம்பிகள் மற்றும் மின்வேலியின் அருகில் செல்லவோ, தொடவோ கூடாது. மின் இணைப்புகளில் ஆர்.சி.சி.பி., கட்டமைப்பு கட்டாயம் பொருத்த வேண்டும்.
மின்கம்பங்களில் விளம்பர பலகைகளை கட்டவும், சாமியானா பந்தல் அமைக்கக்கூடாது. ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை மின்கம்பங்கள் மற்றும் இழுவை கம்பிகளில் கட்டக்கூடாது.
மின்வாரியத்தின் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட, மின்வாரிய அலுவலகங்களை அணுக வேண்டும். அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை பார்த்தால், உடனே 94987-94987 என்ற மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கம்பியின் அருகில் செல்லவோ, தொடவோ கூடாது. மின்கம்பியின் அருகில் போதுமான இடைவெளி இல்லாமல் கட்டடங்களை கட்டக்கூடாது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.