/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமிடும் கண்காட்சி
/
அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமிடும் கண்காட்சி
ADDED : செப் 12, 2024 11:34 PM

'யார்னெக்ஸ்', 'டெக்ஸ் இந்தியா', 'டைகெம்' கண்காட்சிகள், உலகத்தரத்தில் அமைந்துள்ளன. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற, புதிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஏற்றுமதியாளர்களுக்கும், உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் நடக்கும் இக்கண்காட்சி, திருப்பூர் பனியன் தொழிலுக்கு புதிய திருப்புமுனையாக அமையும். வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்திக்கு, தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம். புவி மாசு ஏற்படுத்தாத ஆடை உற்பத்திக்கான எங்களது முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன.
கண்காட்சி அரங்குகள், புதுமையான படைப்புகளுடன், காலத்துக்கு ஏற்றவையாக அமைந்துள்ளன. திருப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடித்தளமிடுவதாக அமைந்துள்ளது. ஏற்றுமதி வர்த்தகம், மாதம், 10 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது; விரைவில், 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டுவோம்.
திருப்பூர் என்பது, உள்நாட்டு உற்பத்தியிலும் மிகப்பெரிய கட்டமைப்புடன் இயங்குகிறது. இந்தியாவின் முன்னணி 'பிராண்டட்' நிறுவனங்களும், திருப்பூருக்கு ஆர்டர் கொடுத்து, ஆடைகளை உற்பத்தி செய்கின்றன. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட, தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.
- சுப்பிரமணியன்
திருப்பூர் ஏற்றுமதியாளர்
சங்க தலைவர்

