/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அபாய நிலையில் அங்கன்வாடி கட்டடம்
/
அபாய நிலையில் அங்கன்வாடி கட்டடம்
ADDED : மே 31, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;பொங்கலுார் கரட்டுப்பாளையத்தில் அங்கன்வாடி கட்டடம் உள்ளது.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளே அங்கு செல்கின்றனர். அந்தக் கட்டடம் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இதனால், கான்கிரீட் சிலாப்கள் சிதிலமடைந்து ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுகிறது. கம்பிகள் மட்டும் நீட்டிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை இடித்து விட்டு புதிதாக கட்டித் தர வேண்டும்.