/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி உதவியாளரிடம் பட்டப்பகலில் நகை பறிப்பு
/
அங்கன்வாடி உதவியாளரிடம் பட்டப்பகலில் நகை பறிப்பு
ADDED : மே 31, 2024 01:56 AM
திருப்பூர்;திருப்பூர் தாராபுரம் ரோடு குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அன்னமணி, 48. இவர் வீரபாண்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று மாலை பணியை முடித்து கொண்டு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.
அன்னமணியை நோட்டமிட்டு டூவீலரில் பின்தொடர்ந்து வந்த, இருவர் கண் இமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த, மூன்றரை சவரன் நகையை பறித்து சென்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்வையிட்டு திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.