/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய அமைச்சர்களை அழைத்து வந்து திருப்பூரின் கோரிக்கை நிறைவேற்ற முயற்சி தொழில்துறையினரிடம் அண்ணாமலை உறுதி
/
மத்திய அமைச்சர்களை அழைத்து வந்து திருப்பூரின் கோரிக்கை நிறைவேற்ற முயற்சி தொழில்துறையினரிடம் அண்ணாமலை உறுதி
மத்திய அமைச்சர்களை அழைத்து வந்து திருப்பூரின் கோரிக்கை நிறைவேற்ற முயற்சி தொழில்துறையினரிடம் அண்ணாமலை உறுதி
மத்திய அமைச்சர்களை அழைத்து வந்து திருப்பூரின் கோரிக்கை நிறைவேற்ற முயற்சி தொழில்துறையினரிடம் அண்ணாமலை உறுதி
ADDED : மார் 02, 2025 04:56 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' 10ம் ஆண்டு விழாவில், பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பூரை சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்பினர்களை நேற்று சந்தித்தார். அதில், தொழில்துறையினர், தங்களது கோரிக்கையை விளக்கினர்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது, திருப்பூரின் பிராண்ட் கம்பீரமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த சந்திப்பில், மொத்தம், 31 வகையான கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. அவற்றில், உடனடியாக தீர்வு காணக்கூடிய ஏழு கோரிக்கைகள் குறித்து, உடனடியாக மத்திய அமைச்சர்களிடம் பேசுவோம். பஞ்சு இறக்குமதிக்கான வரி, 'டப்' திட்டம் போன்ற கோரிக்கையும் அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். புதிய திருத்தத்துடன் கூடி, 'டப்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தப்படும்.
பல்வேறு மாநிலங்கள், தொழில் துவங்க வருமாறு, அதிகபட்ச மானியம் வழங்கி அழைக்கின்றன. கைவசம் உள்ள தொழில்களை மேம்படுத்தவும் மானியம் வழங்குகின்றன. தமிழகத்தில் மானியம் வழங்குவது மிகக்குறைவு என்பதால், மத்திய அரசு தலையிட்டு, நேரடி உதவிகளை வழங்க உத்தேசித்துள்ளது.
'பாரத் டெக்ஸ்' கண்காட்சியை பார்வையிட்ட பின், பிரதமர் மோடி பல்வேறு விவரங்களை கேட்டறிந்துள்ளார். குறிப்பாக, தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளாக அமைச்சரிடம் கேட்டறிந்துள்ளார். விரைவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருப்பூர் வந்து தொழில்துறையினரை சந்திப்பார். உங்களது கோரிக்கைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்கும்.
திருப்பூர் தொழில்துறையினர் அனைவரும், டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பது சிரமம். எனவே, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின், ஜவுளித்துறை மற்றும் நிதி அமைச்சரை திருப்பூர் அழைத்து வந்து, கலந்தாய்வு நடத்தி, தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும். மாநில அரசு அதிகாரிகள், ஜி.எஸ்.டி., என்ற வரிமீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். பல்வேறு குளறுபடியை ஏற்படுத்தி வருகின்றனர். திருப்பூர் தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்னைகளை கேட்டறிந்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு மானியத்துடன், திறன் பயிற்சி அளிக்கும் மையம் திருப்பூரில் துவக்கவும், தொழிற்சாலைகளுக்கு தேவையான திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.