/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊர்தோறும் உறுதி அளிக்கும் வேட்பாளர் அண்ணாமலை
/
ஊர்தோறும் உறுதி அளிக்கும் வேட்பாளர் அண்ணாமலை
ADDED : ஏப் 02, 2024 10:48 PM
பல்லடம்;விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக, ஊர்தோறும் சென்று அண்ணாமலை உறுதி அளித்து வருவது, நம்பிக்கையை ஏற்படுத்துவதாக, விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
ஆனைமலை-யாறு - நல்லாறு திட்டம், விவசாயிகளின், 60 ஆண்டு கனவாக உள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் மட்டுமே எதிர்காலத்தில், விவசாயம் செழிப்பதுடன் தண்ணீர் பற்றாக்குறையும் தீரும் என்ற சூழல் உள்ளது.
கடந்த காலத்தில், இத்திட்டத்தை நிறைவேற்ற, தமிழக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும், விவசாயிகள் கோரிக்கை வைத்தும், இதை தேர்தல் வாக்குறுதியில் கூட கொண்டு வரவில்லை. ஆனால், பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை மட்டுமே, பொது மேடையில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தவுடன், ஊர் ஊராகச் சென்றும் வாக்குறுதி அளித்து வருகிறார்.
மீண்டும் பா.ஜ.,தான் அடுத்து ஆட்சி அமைக்கப் போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு அமையும் பட்சத்தில், பிரதமர் மோடியுடன் நெருக்கமாக உள்ள அண்ணாமலை, விவசாயிகளின் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற்றால் மட்டுமே, விவசாயிகளின் 60 ஆண்டு கனவு திட்டம் மட்டுமன்றி, ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் வினியோகம், சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவார் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

