தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கே.எம்.சி பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்  

கே.எம்.சி பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்  

கே.எம்.சி பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்  


ADDED : ஜூலை 26, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளியின், 18வது ஆண்டு விழா– ‘க்ளியோஸ் பெஸ்டா –2026’  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தாளாளர் மனோகரன் தலைமை வகித்தார். தலைவர் சண்முகம் – லோகநாயகி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் வருண் முத்துலிங்கம் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். பள்ளி ஆண்டு விழா மலரை, சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். 10 மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

தேசிய திறந்த நிலை பள்ளி முன்னாள் செயலர் தருமன் பேசுகையில்,‘தேசிய திறந்த நிலை பள்ளி வழங்கும் சான்றிதழ், உயர்கல்வி பயில மதிப்புமிக்க சான்றிதழாக உள்ளது. மாணவர்கள் உற்சாகத்துடன் பயில வேண்டும்; தனித்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்,’ என்றார்.

சொற்பொழிவாளர் பர்வீன் சுல்தானா பேசுகையில்,‘‘பள்ளியும், வீடும் சிறப்பாக அமைந்தால், மாணவர்களிடையே ஆளுமைத்திறன் சிறப்பாக வளரும். கற்கும் போது பணிவாக இருக்கும் மாணவர்கள், கற்றபிறகு அதிகாரம் பொருந்தியவராக இருக்க வேண்டும்,’’ என்றார்.

மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை, தலைமை செயல் அலுவலர் சுவஸ்திகா, தலைமை ஆசிரியர் பிரேமலதா ஆகியோர் செய்திருந்தனர்.

––

கே.எம்.சி. பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் தேசிய திறந்த நிலை பள்ளி முன்னாள் செயலர் தருமன், சொற்பொழிவாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் ஆண்டு விழா மலரை வெளியிட்டனர். அருகில், தாளாளர் மனோகரன் உள்ளிட்டோர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us