/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணம் பறிப்பு விவகாரம்; மேலும் ஒருவர் கைது
/
பணம் பறிப்பு விவகாரம்; மேலும் ஒருவர் கைது
ADDED : மார் 11, 2025 05:31 AM
திருப்பூர் : கரூர் நகை வியாபாரியிடம் போலீஸ் என கூறி, 1 கோடியே பத்து லட்சம் ரூபாயை பறித்து சென்ற வழக்கில், மேலும் ஒருவரை கைது செய்தனர்.
கரூர், கீழநஞ்சையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 60; நகை வியாபாரி. கடந்த, 4ம் தேதி மாலை கோவையில் நகை வாங்க கரூரில் இருந்து காரில் கிளம்பி வெங்கடேஷ் மற்றும் கார் டிரைவர் ஜோதிவேல், 54 ஆகியோர் சென்றனர்.
அப்போது, காங்கயம் அருகே சம்பந்தம்பாளையத்தில் வழிமறித்த கும்பல், தங்களை போலீஸ் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டு, ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் போன்களை பறித்து சென்றனர். புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து, பணம் பறிப்பு தொடர்பாக வியாபாரியின் கார் டிரைவர் ஜோதிவேல், 55, அவரது நண்பர் தியாகராஜன், 41, ஜாகீர் உசேன், 25 மற்றும் பிளஸ்2 மாணவர் உட்பட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கோபியை சேர்ந்த தினேஷ், 44 என்பவரை கைது செய்து, ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுவரை, 96.53 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர். இவ்வழக்கில், மூளையாக செயல்பட்ட, இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.