ADDED : ஜூலை 01, 2024 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாபாளையம் பஸ் நிறுத்தம் குமரன் காலனி, கோபால்ட் மில் உள்ளிட்ட பகுதிகளில் பிரசார இயக்கம் நடந்தது. ஒன்றிய தலைவர் சந்தோஷ் குமார், செயலாளர் ஹனிபா, பொருளாளர் வடிவேல், நந்தகோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் சரவணன் துவக்கிவைத்தார்.
திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன் ஆகியோர் வாழ்த்தினர். கிளை தலைவர் சங்கர் நன்றி கூறினார்.