/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு
/
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : மார் 22, 2024 10:41 PM
உடுமலை:உடுமலை கிராம ஊராட்சிகளில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களால், மண்ணும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாநில அளவில், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மைக்ரான் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடுமலை ஒன்றியத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தாராளமாக உள்ளது.
பொருட்கள் வாங்குவதற்கும், பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், தட்டுகள் என பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். ஊராட்சிகளில் உள்ள நீர்நிலைகளிலும், ரோட்டோரமும் பிளாஸ்டிக் கழிவுகளாக குவிந்து கிடக்கின்றன.
குறிப்பாக, 'டாஸ்மாக்' கடைகளில் பிளாஸ்டிக் கோப்பைகளை பயன்படுத்திவிட்டு, அருகில் உள்ள விளைநிலங்களிலும் திறந்த வெளியிலும் வீசிச்செல்கின்றனர்.
கால்நடைகள் மேய்ச்சலின் போது, பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து உண்ணுகின்றன. வணிகக்கடைகளில் பொருட்களையும் பிளாஸ்டிக் கவர்களில் வழங்குகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பது குறித்து, அதிகாரிகள் மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும்.
விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

