/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை 10 மடங்குக்கு மேல் விண்ணப்பம்
/
அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை 10 மடங்குக்கு மேல் விண்ணப்பம்
அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை 10 மடங்குக்கு மேல் விண்ணப்பம்
அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை 10 மடங்குக்கு மேல் விண்ணப்பம்
ADDED : ஜூன் 03, 2024 01:06 AM
திருப்பூர்:இளங்கலை பட்டப்படிப்புக்கு, திருப்பூரில் உள்ள அரசு கல்லுாரிகளில் உள்ள இடங்களைக் காட்டிலும், கூடுதலாக ஐந்து முதல் 10 மடங்குக்கு மேல் வரை விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியானது. அன்றைய தினம் முதலே அரசு கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கு, www.tngasa.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, கல்லுாரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியது.
உயர்கல்வி படிப்பில் இணைய உள்ள கல்லுாரி மாணவ, மாணவியர் பலரும் ஆர்வம் காட்டியதால், மே, 20ம் தேதி முடிய இருந்த அவகாசம், மேலும் நான்கு நாட்களுக்கு (மே 24 வரை) நீட்டிக்கப்பட்டது.
அரசு கல்லுாரிகளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கான சிறப்பு ஒதுக்கீடு கவுன்சிலிங் முடிந்த நிலையில், ஜூன் 10 முதல் பொது கவுன்சிலிங் துவங்கவுள்ளது. ஜூலை முதல் வாரம் கல்லுாரி திறக்கப்பட உள்ளது.
குவிந்தவிண்ணப்பங்கள்
இளங்கலை பட்டப்படிப்புக்கு அரசு கல்லுாரியில் குவிந்துள்ள விண்ணப்பங்கள் கல்லுாரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களை மலைக்க வைத்துள்ளது. மாவட்டத்தில் அதிக இடங்களை கொண்டதாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி உள்ளது.
இக்கல்லுாரியில் மொத்தமுள்ள, 808 இடங் களுக்கு, 9,835 விண்ணப்பங்கள் வந்துள்ளன. திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் மொத்தமுள்ள, 1,086 இடங்களுக்கு, 5,535 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்விரண்டு கல்லுாரிகளிலும், மொத்தமுள்ள இடங்களை விட ஐந்து முதல் பத்து மடங்கு விண்ணப்பம் குவிந்துள்ளது. கல்லுாரி நிர்வாகம், பேராசிரியர்களை வியக்க வைத்துள்ளது.
தற்போது, சிறப்பு ஒதுக்கீட்டில் குறைந்த பட்ச இடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், வரும், ஜூன், 10 ம் தேதி முதல் பொது கவுன்சிலிங் துவங்க உள்ளது, குறிப்பிடத்தக்கது.
கல்லுாரி பேராசிரியர்கள் கூறுகையில், 'இளங்கலை பட்டப்படிப்பில், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த பி.காம்., பட்டப் படிப்பில் சேர மட்டுமே, 60 சதவீத விண்ணப்பங்கள் வந்துள்ளது.
பெரும்பாலானோர் கலை அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகளையே தொடர விரும்புகின்றனர். மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கட்டாயம் கிடைக்கும். மற்றவர்கள் காத்திருந்து பெறவேண்டும்,' என்றனர்.