/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்கண்ணா கல்லுாரியில் விண்ணப்பிக்கலாம்!
/
சிக்கண்ணா கல்லுாரியில் விண்ணப்பிக்கலாம்!
ADDED : மே 10, 2024 01:02 AM
திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை பட்ட வகுப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
இது குறித்து, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை:
சிக்கண்ணா அரசுக்கலை கல்லுாரியில், பி.காம்., பி.காம்., (சிஏ) பி.காம்., சர்வதேச வணிகவியல், பி.பி.ஏ., வரலாறு, பொருளியல், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாட்டியல், பி.சி.ஏ., விலங்கியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம் ஆகிய பாடப்பிரிவுகள் செயல்படுகின்றன.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், முதலில், www.tngasas.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னரே, தாம் சேர விரும்பும் கல்லுாரிகளுக்கும், சேர விரும்பும் பாடப்பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்க முடியும்.
இதுதவிர, பதிவு செய்ய பள்ளியில் வழங்கப்பட்ட எமிஸ் எண், பிளஸ் 2 பதிவெண், ஜாதி சான்றிதழ் வரிசை எண், ஆதார் எண், மதிப்பெண் தேவைப்படும் ஒரு கல்லுாரியில் உள்ள தகுதியுடைய அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் சந்தேகம் இருப்பின், கல்லுாரியில் உள்ள மாணவர் தகவல் மையத்தில் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை அணுகலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.