/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளுக்கு இரவு காவலர்கள் நியமனம்: ஊரக வளர்ச்சித்துறை ஏற்பாடு
/
அரசு பள்ளிகளுக்கு இரவு காவலர்கள் நியமனம்: ஊரக வளர்ச்சித்துறை ஏற்பாடு
அரசு பள்ளிகளுக்கு இரவு காவலர்கள் நியமனம்: ஊரக வளர்ச்சித்துறை ஏற்பாடு
அரசு பள்ளிகளுக்கு இரவு காவலர்கள் நியமனம்: ஊரக வளர்ச்சித்துறை ஏற்பாடு
ADDED : ஜூலை 08, 2024 12:57 AM
உடுமலை;அரசுப்பள்ளிகளில், துாய்மைப்பணியாளர்கள் மற்றும் இரவுக்காவலர் நியமிப்பதற்கு பட்டியல் தயார்படுத்தப்படுகிறது.
அரசுப்பள்ளிகளில், துாய்மைப்பணியாளர் மற்றும் இரவுக்காவலர் நியமிப்பதற்கான அறிவிப்பை, மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முதற்கட்டமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் இப்பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஏற்கனவே உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில், துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி கழிப்பறைகளை பராமரிப்பதற்கு துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பள்ளி வளாகம், வகுப்பறை உள்ளிட்ட துாய்மைப்பணிகளை மேற்கொள்ள கூடுதல் துாய்மைப்பணியாளரும், பள்ளி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இரவு காவலரும் நியமிக்கப்படுகின்றனர்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 450க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ஊரகப்பகுதி பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல், ஊரக வளர்ச்சியின் சார்ந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளியின் நிலை மற்றும் மாணவர் எண்ணிக்கையை, ஊரக வளர்ச்சித்துறையினர் ஆய்வு நடத்தி பட்டியலை உறுதி செய்கின்றனர்.
உடுமலையில் உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.