/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை மையங்களுக்கு மாற்று அலுவலர் நியமனம்
/
விற்பனை மையங்களுக்கு மாற்று அலுவலர் நியமனம்
ADDED : செப் 07, 2024 11:36 PM
திருப்பூர், : தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் திருப்பூர் தலைமை அலுவலகத்தில் நிர்வாகத்துக்கும், ஒரு தரப்பு அலுவலர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக விற்பனை மையங்கள் திறக்கப்படவில்லை. சில ஊழியர்கள் தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, சங்க செயலாளர் வாகனத்தை சிறைப்பிடித்தனர். போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.
இதனால், விற்பனை மைய மேலாளர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக மூன்று அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளித்து அந்த பணியிடங்களுக்கு நியமனம் செய்து சங்க செயலாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சங்கத்தில் நிலவும் பிரச்னை குறித்து சப்- கலெக்டர் முன்னிலையில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை விற்பனை மையங்களைத் திறக்க வேண்டாம் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.