/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு
/
பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு
ADDED : ஆக 04, 2024 10:21 PM

உடுமலை : அரசு பள்ளி பிளஸ் 1 மாணவர்களுக்கான முதலமைச்சர் திறனாய்வு தேர்வில், 464 மாணவர்கள் பங்கேற்றனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியை, இடைநிற்றல் இல்லாமல் பெறுவதற்கான திறனாய்வு தேர்வாக, மாநில பள்ளிக்கல்விதுறையின் சார்பில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு பிளஸ் 1 மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் மேல்நிலை வகுப்பு முடிக்கும் வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 1 வகுப்பு மட்டுமின்றி, பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டார அரசு பள்ளிகளுக்கான தேர்வு இரண்டு மையங்களில் நடந்தது.
உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 222 மாணவர்கள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 240 மாணவர்களும் தேர்வு எழுதினர்.
காலையில் கணிதம், மதியம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்வு நடந்தது. மொத்தமாக 120 மதிப்பெண்களுக்கு தேர்வு வினாத்தாள் தொகுக்கப்பட்டுள்ளன.
வால்பாறை
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், திறனாய்வு தேர்வுக்கு, 106 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தேர்வுக்கான ஏற்பாடுகளை வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.