/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கியத்துவம் பெறும் மரங்கள் வளர்ப்பு
/
முக்கியத்துவம் பெறும் மரங்கள் வளர்ப்பு
ADDED : மே 03, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத்துவங்கியிருக்கின்றனர். கிராம ஊராட்சிகளில், நடக்கும் கிராம சபை கூட்டங்களில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் அதிகளவில் பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நுாறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் வாயிலாக, கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் எழுந்துள்ளது.
மேலும், கிராமங்களில் உள்ள தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மத்தியிலும் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.