/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரிக்கல்பாளையத்துக்கு தொல்லியல் முக்கியத்துவம்! தொல்லியல் துறை தலைவரிடம் வலியுறுத்தல்

ADDED : செப் 03, 2024 11:43 PM
திருப்பூர்:''குமரிக்கல்பாளையம் பகுதியை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்,'' என, இந்திய தொல்லியல் துறை தலைவரிடம், பா.ஜ., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், காவுத்தம்பாளையம் ஊராட்சியில், குமரிக்கல்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில், 150 ஏக்கர் பரப்பளவில், துணை மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் முடிவெடுத்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள், அப்பகுதியில் பழமையான தொல்லியல் எச்சங்கள் இருப்பதால், துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, தொல்லியல் எச்சங்களை பாதுகாக்க வேண்டும், என வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு, டிச., மாதம், மத்திய தொல்லியல் குழுவினர், அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள பிரம்மாண்ட நடுகல், முதுமக்கள் தாழி, பானைகள், எலும்பு துண்டுகள் என, மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தினர்.
சில மாதங்களுக்கு முன் குமரிக்கல்பாளையம் பகுதிக்கு வந்திருந்த பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, போராட்டம் நடத்தி வரும், விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக, டில்லியில் தொல்லியல் துறை தலைவர் யதுபீர் சிங் ராவத்தை சந்தித்து, 'குமரிக்கல்பாளையம் பகுதியை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்,' என்ற கோரிக்கையை முன் வைத்தார்.