/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பஸ் இயக்கம் திருப்தியில்லையா?'149'க்கு அழைத்து புகார் செய்யலாம்!

ADDED : ஏப் 23, 2024 10:32 PM
திருப்பூர்: 'அரசு பஸ் இயக்கத்தில் உள்ள குறைகளை, 149 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்' என, போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலின் போது, அரசு போக்குவரத்து கழக பஸ் போக்குவரத்து போதிய அளவில் இல்லை என்ற காரணம் கூறி, ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை; இதனால், ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், இதுபோன்ற சமயங்களில் பஸ் போக்குவரத்தில் நிலவும் பிரச்னை குறித்து, அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண், 149ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, ஏற்கனவே போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்திருந்தனர்.
அதே போன்று, 1800 599 1500 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் புகார் தெரிவிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு, தற்போது மீண்டும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பயணிகள் கூறுகையில், 'தேர்தல் சமயத்திலாவது, பஸ் போக்குவரத்தில் அரசு கவனம் செலுத்தியிருக்கலாம். குறைகளை தெரிவிக்கும் எண்களை மட்டும் வழங்கினால் போதாது; இது, வெறும் அறிவிப்பாக இல்லாமல், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.