ADDED : ஆக 09, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;மடத்துக்குளம் அருகே, வேடபட்டியில், பெண்ணிடம் மதுபோதையில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மடத்துக்குளம் வேடபட்டி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர், சரஸ்வதி,38. இவர் தனது வீடு அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, வேடபட்டியில், அரிசி ஆலை நடத்தி வரும் சண்முக சுந்தரம், 45, மது போதையில் தனது காரை ஓட்டிக்கொண்டு அங்கு வந்துள்ளார். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சரஸ்வதியை, தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்க முயற்சித்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் கூடியதும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
மதுபோதையில் தன்னிடம் தகராறு செய்தவர் மீது, சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.