/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுக்கு எதிராக 'பேஸ்புக்'கில் அவதுாறு பதிவிட்டவர் கைது
/
அரசுக்கு எதிராக 'பேஸ்புக்'கில் அவதுாறு பதிவிட்டவர் கைது
அரசுக்கு எதிராக 'பேஸ்புக்'கில் அவதுாறு பதிவிட்டவர் கைது
அரசுக்கு எதிராக 'பேஸ்புக்'கில் அவதுாறு பதிவிட்டவர் கைது
ADDED : ஜூலை 10, 2024 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை அருகே, தமிழக முதல்வர், நீதித்துறையை தவறாக முகநுால் பக்கத்தில் வெளியிட்டவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, ஜோத்தம்பட்டி, ஆஸ்பத்திரி மேடு பகுதியை சேர்ந்த ஜெயராம் மகன் பில்நெட், 51.
இவர், சமூக வலைத்தளமான 'பேஸ்புக்' பக்கத்தில், தமிழக முதல்வர், அரசு, நீதித்துறை, காவல்துறைக்கு எதிராக, அவதுாறு பரப்பும் வகையிலும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு செய்திருந்தார்.
இது குறித்து, கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, மடத்துக்குளம் ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.