ADDED : செப் 04, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;டாஸ்மாக் 'பாரில்' தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், டி.என்.கே., புரத்தை சேர்ந்த ஆனந்தன், 30 என்பவர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை பாரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அருகே மற்றொரு டேபிளில் அமர்ந்திருந்த எம்.எஸ்., நகரை சேர்ந்த ஸ்ரீதர், 30 என்பவருடன் தகராறு எழுந்தது. இரு தரப்பினரும் மோதி கொண்டனர். அதில், ஆனந்தன் படுகாயமடைந்தார். புகாரின் பேரில், ஸ்ரீதர் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் ஸ்ரீதரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.