/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிய யோகாசன போட்டி:திருப்பூர் மாணவர்கள் சாதனை
/
ஆசிய யோகாசன போட்டி:திருப்பூர் மாணவர்கள் சாதனை
ADDED : மே 28, 2024 12:42 AM

திருப்பூர்:ஆசிய - பசிபிக் யோகாசன போட்டியில், திருப்பூர் மாணவர்கள் சாதித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட யோகாசன அசோசியேஷன் சார்பில், கடந்த, பிப்., மாதம், யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், கடந்த, 18, 19ம் தேதிகளில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த, மூன்றாவது ஆசிய பசிபிக் யோகாசன போட்டியில் பங்கேற்றனர். இதில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, நேபாளம், இந்தியா, ஸ்ரீ லங்கா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 150 மாணவர்கள் பங்கேற்றனர்.
சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில், மாணவர் வர்ஷன், 'டிரெடிஷனல் ஈவென்ட்' பிரிவில், 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார். மாணவி கனிஷ்கா, 3ம் இடம் பிடித்து, வெண்கலம் வென்றார். இவர்கள் இருவரும், நெசவாளர் காலனியில் செயல்படும் துவாரகா கல்வி நிலையத்தின் வாயிலாக, யோகா பயின்று, போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். சாதித்த மாணவர்களை, கல்வி நிலைய இயக்குனர்கள் விஜயாபானு, இந்து, பயிற்சியாளர் ஜாவித் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.