/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வக்கீல் மீது தாக்குதல்; வழக்கு பதிவு
/
வக்கீல் மீது தாக்குதல்; வழக்கு பதிவு
ADDED : ஜூலை 21, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் அரண்மனைப் புதுாரைச் சேர்ந்தவர் ஹரிதாஸ், 51; வக்கீல்.
தென்னம்பாளையம் ஸ்கூல் வீதியில் இவர் அலுவலகம் உள்ளது. பிற்பகல், அலுவலகத்தில் ஹரிதாஸ் இருந்த போது, ஹிந்து ஜனநாயக பேரவை மாநில இணை செயலாளர் அம்ஜித் அசோக், 34, என்பவர் அத்துமீறி நுழைந்தார். ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தபடி ஹரிதாஸை தாக்கினார். தடுக்க வந்த உதவியாளர் அப்பாஸ் மந்திரியையும் கடுமையாகப் பேசினார். அக்கம்பக்கத்தினர் கூடிய போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஹரிதாஸ் அளித்த புகாரின் பேரில், தெற்கு போலீசார் வழக்கு பதிவு யெ்து விசாரிக்கின்றனர்.