/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதுநிலை பி.எச்.டி., படிக்கும் பழங்குடியின மாணவருக்கு உதவி
/
முதுநிலை பி.எச்.டி., படிக்கும் பழங்குடியின மாணவருக்கு உதவி
முதுநிலை பி.எச்.டி., படிக்கும் பழங்குடியின மாணவருக்கு உதவி
முதுநிலை பி.எச்.டி., படிக்கும் பழங்குடியின மாணவருக்கு உதவி
ADDED : மே 28, 2024 12:52 AM
திருப்பூர்;வெளிநாடுகளில், முதுநிலை பி.எச்.டி., பயில இருக்கும் பழங்குடியின மாணவர்கள், கல்வி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் (2024-25), வெளிநாடுகளில் முதுநிலைபி.எச்.டி., தொடர தேர்வான, பழங்குடியின மாணவருக்கு, தேசிய ஓவர்சீஸ் கல்வி உதவித்திட்டத்தில், கல்வி உதவி வழங்கப்படுமென, பழங்குடியினர் நல இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள், https://overseas.tribal.gov.in என்ற இணையதளத்தில், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தை பார்வையிடலாம். கல்வி நிறுவனங்களின் தகவல் பலகையில் இதுதொடர்பாக அறிவிப்பு செய்யவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.