/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; சித்திரை தீர்த்தக்குட யாத்திரை
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; சித்திரை தீர்த்தக்குட யாத்திரை
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; சித்திரை தீர்த்தக்குட யாத்திரை
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; சித்திரை தீர்த்தக்குட யாத்திரை
ADDED : ஏப் 05, 2024 11:01 PM
அவிநாசி : அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழுவினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், 10ம் ஆண்டாக நடைபெறும் சித்திரை 1ம் தேதி தீர்த்த குட யாத்திரையை சிறப்பாக நடத்துவது, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள அனைத்து குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் வரும் வரை தீர்த்த குட யாத்திரை தொடரும்; அத்திக்கடவு திட்டம் - 2.0க்கான ஆய்வுகளை நடத்தி விரைவாக செயல்படுத்திட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.