/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தறி உரிமையாளர் மீது தாக்குதல் போலீஸ் ஸ்டேஷன் முன் 'தர்ணா'
/
தறி உரிமையாளர் மீது தாக்குதல் போலீஸ் ஸ்டேஷன் முன் 'தர்ணா'
தறி உரிமையாளர் மீது தாக்குதல் போலீஸ் ஸ்டேஷன் முன் 'தர்ணா'
தறி உரிமையாளர் மீது தாக்குதல் போலீஸ் ஸ்டேஷன் முன் 'தர்ணா'
ADDED : ஆக 06, 2024 06:45 AM
அவிநாசி: சேவூர் அருகேஅ.குரும்பபாளையம்கிரீன் லேண்ட் பகுதியில் வசித்து வருபவர் சாஸ்திரி, 60. விசைத்தறி உரிமையாளர். இவரது விசைத்தறி கூடத்தில் சேவூர் அருகே மூலக்குரும்பபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த வாரத்தில் சரியாக வேலைக்கு வராதது குறித்து, இவரிடம் சாஸ்திரி கேட்டார். நேற்று முன்தினம் சாஸ்திரி வீட்டு முன் இரண்டு டூவீலர்களில் வந்த ஐந்து பேர் சாஸ்திரியை கட்டையால் தாக்கி விட்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த சாஸ்திரியை மீட்டு அருகில் இருந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே சாஸ்திரியை தாக்கியவர்களை கைது செய்ய வலி யுறுத்தி, அ. குரும்பபாளையம் பகுதி பொதுமக்கள் சேவூர் போலீஸ் ஸ்டேஷன் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக, சாஸ்திரியை தாக்கிய, 17 வயது கொண்ட இரண்டு சிறுவர்கள், மூலக்குரும்பபாளையத்தை சேர்ந்த அய்யாவு மகன் கேசவன், 26, நம்பியூர் ஒன்றியம், எம்மாம்பூண்டி - அழகம்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல், 24, சுந்தர்ராஜன், 24, என ஐந்து பேரை போலீசார் கைதுசெய்தனர். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.