ADDED : செப் 12, 2024 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், கண்ணாடிபுத்துார் மின் பகிர்மான மின் நுகர்வோர், நடப்பு மாதத்திற்கான மின் கட்டண தொகையாக, ஜூலை மாதம் செலுத்திய தொகையை செலுத்துமாறு, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
உடுமலை கோட்டம், மடத்துக்குளம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, கண்ணாடிபுத்துார், கிருஷ்ணாபுரம் ஆகிய பகிர்மான பகுதிகளில், நிர்வாக காரணங்களினால், நடப்பு செப்.,மாத மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.
ஆகவே, மேற்கண்ட பகிர்மானத்திற்குட்பட்ட மின் நுகர்வோர், கடந்த, ஜூலை மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, செப்., மாதத்திற்கான மின் கட்டண தொகையாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

