ADDED : ஏப் 07, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூருக்கு வந்த காங்., மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை வரவேற்ற, காங்., மாவட்ட கலைப்பிரிவு சார்பில், தாரை, தப்பட்டை, மத்தளம், கலைநிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் முன் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்த பின், வண்ண காகிதங்களுடன் சக்கரத்தை சுற்றி சாகசம், ஒருவர் மீது ஒருவர் ஏறி, 30 மீ., துாரத்துக்கு கட்சிக்கொடியை நளினமாக சுற்றி அசத்தி, அங்கிருந்தவர்களிடம் கைதட்டல் பெற்றனர்.
கொளுத்தி எடுத்த வெயிலில், காலில் செருப்பு இல்லாமல், சூடு பறக்க, நடன கலைஞர்களை போல், இவர்கள் செய்த சாகசம் மக்களிடம் கைதட்டல் பெற்றது.

