ADDED : ஜூன் 04, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;இந்திய பட்டைய கணக்காளர் நிறுவன திருப்பூர் கிளை 35ம் ஆண்டு நிறுவன நாள் விழா, பெத்தி செட்டிபுரத்தில் உள்ள ஆடிட்டர் அசோசியேஷன் அரங்கில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தென்னிந்திய பட்டய கணக்காளர் நிறுவன தலைவர் கீதா, ஆடிட்டர் கோபாலகிருஷ்ணராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ஆரம்ப கால உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர். உள்நாட்டில் மட்டுமின்றி உலகளாவிய நாடுகளில் பணிபுரியும் ஆடிட்டர்களை இணைந்து பட்டய கணக்காளர் நிறுவனங்களை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது. பட்டய கணக்காளர் சங்க செயலாளர் தருண் நன்றி கூறினார்.