/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை அரிய வாய்ப்பை பயன்படுத்தலாம்
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை அரிய வாய்ப்பை பயன்படுத்தலாம்
தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை அரிய வாய்ப்பை பயன்படுத்தலாம்
தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை அரிய வாய்ப்பை பயன்படுத்தலாம்
ADDED : ஜூலை 05, 2024 02:17 AM
உடுமலை:உடுமலை, தாராபுரம், திருப்பூரில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தவறியவர்களும் தொழிற்கல்வியில் சேர விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ.,ல் படிப்போருக்கு, 100 சதவீத வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.
கல்விக்கட்டணம் இலவசம், மாதாந்திர உதவித்தொகை மாதம், 750 ரூபாய், இலவச பஸ்பாஸ், சைக்கிள், பாட உபகரணங்கள், சீருடை வழங்கப்படுகிறது.
மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்தில், மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.
தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான முதற்கட்ட சேர்க்கை, ஜூன் மாதம் ஆன்லைன் வாயிலாக நடந்தது.
தற்போது அரிய வாய்ப்பாக, நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதிச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன், 5 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன், வங்கிக்கணக்கு எண் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன், நேரடியாக அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் சென்று சேர்க்கை பதிவு செய்யலாம்.
நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. சேர்க்கை பதிவு விடுமுறை நாட்கள் தவிர வேலை நாட்களில் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணிவரை நடக்கிறது.
கூடுதல் தகவல் பெறுவதற்கு, 99428 11559, 86680 41629, 99442 06017 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.