/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா
/
மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா
ADDED : ஆக 22, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர் மேற்கில் உள்ள ஸ்ரீ மஹாகணபதி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில், 24ம் ஆண்டு ஆவணி பெருவிழா சிறப்பாக நடந்தது.
விழாவையொட்டி, முதல் நாளில், பக்தர்கள் பூவோடு எடுத்து, அம்மனை வழிபட்டனர். இரண்டாம் நாளில், பால் குடம், தீர்த்த குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அன்றைய தினம் மாலை, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் நாள் மஞ்சள் நீர் அபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.