/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாகிறது; நிர்வாகப்பணிகள் துவக்கம்
/
அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாகிறது; நிர்வாகப்பணிகள் துவக்கம்
அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாகிறது; நிர்வாகப்பணிகள் துவக்கம்
அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாகிறது; நிர்வாகப்பணிகள் துவக்கம்
ADDED : ஆக 08, 2024 12:19 AM

திருப்பூர்: அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப்பணிக்கான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு உள்ளிட்ட நிர்வாகப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு செல்லும் பிரதான சாலையாக, அவிநாசி - ஆட்டையம்பாளையம், அன்னுார் சாலை உள்ளது. இடைப்பட்ட, 42 கி.மீ., துார சாலையை, தேசிய நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்க, கடந்த, 10 ஆண்டுக்கு முன் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது; இது, கொள்கை ரீதியாக ஏற்கப்பட்டும், அதிகாரபூர்வமாக ஏற்கப்படவில்லை.
சாலையின் பல இடங்கள் பழுதாகி, அடிக்கடி விபத்து நேர்கிறது. மழை பெய்தால்,ஆங்காங்கே மழைநீர் குளமாக தேங்கி நின்றது. பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பாதித்தனர். பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், அவ்வப்போது பழுதுபார்ப்பு பணி மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.இச்சாலையை மீண்டும் மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் கொண்டு வருவதற்கான, துறை ரீதியான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 'தற்போது, சாலை, மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது' எனக் கூறப்படுகிறது. 'சாலை விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு, உள்ளிட்ட நிர்வாகப்பணிகள் துவங்கியுள்ளது' என்கின்றனர், நெடுஞ்சாலைத்துறையினர்.
---
அவிநாசி - கருவலுார் சாலையின் இருபுறமும் மரங்கள் சூழ்ந்து குளுமை தருகின்றன. சாலை விரிவாக்கப்பணியின்போது இயன்றவரை மரங்கள் வெட்டப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும். சாலை நடுவில் மையத்தடுப்பு அமைத்து மரக்கன்று நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.