/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி ரோடு சீரமைப்பு பணிகள் துவங்கியது!
/
அவிநாசி ரோடு சீரமைப்பு பணிகள் துவங்கியது!
ADDED : மே 04, 2024 11:10 PM

திருப்பூர்:திருப்பூர் - அவிநாசி ரோட்டில், குமார் நகர், பங்களா ஸ்டாப் பகுதியில், பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக இரவு நேரங்களில் குழி தோண்டி புதிய குழாய்கள் பதிக்கும் பணி பல நாட்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில், குழி தோண்டி குழாய் பதித்த இடத்தில் முறையாக தார் ரோடு போட்டு சீரைமக்காமல், வெறுமென மண்ணைக் கொட்டி மூடிச் சென்றனர். இதனால், கொளுத்தும் கோடை வெயில் அனல் பறக்கும் இந்த ரோட்டில், மண் புழுதியும் பரவி மேலும் பெரும் அவதியை ஏற்படுத்தியது. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சிறு விபத்துகள் ஏற்படுவதும், வாகனங்கள் பழுதடைவதும் சகஜமாக மாறியது.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் சுட்டிக்காட்டி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மண் மூடிய குழிகள் அமைந்த இடங்களில் நேற்று முன்தினம் தண்ணீர் ஊற்றி மட்டம் ஏற்படுத்தப்பட்டது. நேற்று காலை அப்பகுதியில் தார் ரோடு போட்டு சேதமான ரோடு புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட சிரமம் விலகியது.